பசுவை அரிவாளால் வெட்டியவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பசுவுடன் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.

01-09-2020 05:17 PM

மதுரை மாவட்டம்,  கல்மேடு பகுதியை சேர்ந்த லட்சுமி என்ற மூதாட்டி வளர்த்து வந்த பசுவானது இதே பகுதியில் சென்று புற்களை மேயந்தபோது  ஜெயசீலன் என்பவர் பசுவை கழுத்து பகுதியில் அரிவாளால் வெட்டியுள்ளார். .. இதனால் பசு வேதனையில் துடிதுடித்த நிலையில் ஓடி மயங்கிவிழுந்துள்ளது.

இதனையடுத்து காயம்பட்ட பசுவை வாகனத்தில் ஏற்றியபடி .மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவந்து பசுவை தாக்கியவர் மீது கால்நடைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலிசார் நடவடிக்கை எடுக்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ...இதனையடுத்து காவல்துறையினர் மற்றும் செய்தியாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி பசுவிற்கு முதலுதவி சிகிச்சை அளிக்க செல்லுமாறு அறிவுறுத்தியதையடுத்து அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பசுவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது...இந்த புகார் தொடர்பாக ஜெயசீலனை போலிசார் தேடி வருகின்றனர்.

மேலும் விலங்குகள் நல வாரிய அதிகாரிகளும் மூதாட்டி லட்சுமியிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.Trending Now: