பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை

12-08-2020 07:19 PM

முன்பகை காரணமாக கும்பகோணம் அருகே நாகுடி கிராமத்தில் அருண் என்ற 32 வயது இளைஞர் வெட்டிப் படுகொலை . சுவாமிமலை போலீசார் விசாரணை .

கபிஸ்தலம் பகுதியில் எலக்ட்ரிஷன்  வேலை பார்த்தவர் அருண் வயது 32. இன்று இவர் சுவாமிமலை அருகில் உள்ள நாககுடி கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார் . இதே ஊரில் உள்ள வசிக்கும்  சிலருடன் அருணுக்கு முன்பகை இருந்துள்ளதாக கூறப்படுகிறது . சில நாட்களுக்கு முன்பு கூட இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

 இந்நிலையில் இன்று மதியம் சுவாமிமலை அருகே உள்ள நாககுடி கிராமத்தில் அருண் இருந்த பொழுது அங்கு வந்த மர்ம நபர்கள் அருணை விரட்டி வந்துள்ளனர் .அவர்களிடம் இருந்து தப்புவதற்காக வயல்வெளியில் அருண் ஓடியுள்ளார் .அங்கேயும் விடாமல் விரட்டிச் சென்ற அந்த கும்பல் அருணை சரமாரியாக வெட்டித் தள்ளி உள்ளது. சம்பவ இடத்திலேயே அருண் உயிரிழந்தார் .வெட்டிய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுவாமிமலை காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற படுகொலை சம்பவத்தால் நாககுடி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது .Trending Now: