சிறுவனுக்கு பாலியல் கொடுமை... பேராவூரணி அரசு மருத்துவமனையில் அட்மிட்.

04-08-2020 06:47 PM

பேராவூரணி அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ள சிறுவன், உடல்நலக் குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காவல்துறை உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.


கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணி வாக்கில், கிரிக்கெட் விளையாடி விட்டு வீடு சென்ற சிறுவனை, அதே பகுதியைச் சேர்ந்த வேன் ஓட்டுநராகப் பணிபுரியும் சக்திவேல் (28) என்பவர், மிரட்டி வற்புறுத்தி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அச்சிறுவன், பேராவூரணி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர், பேராவூரணி காவல்நிலையத்தில் திங்கள்கிழமை அன்று புகார் அளித்துள்ளனர். மேலும், சக்திவேல் தங்களை மிரட்டி, தங்கள் குடும்ப பெண்களை மார்பிங் செய்து, ஆபாசமாக முகநூலில் பதிவேற்றம் செய்வதாக அச்சுறுத்துவதாகவும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் தெரிவித்தார்.Trending Now: