திருப்பூரில் ஆசைப்பட்டு மோசம் போன மக்கள் பலே கில்லாடி பலலட்சம் மோசடி எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்!

04-08-2020 08:53 AM

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லுாரில் வீடு கட்டி கொடுப்பதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.பெருமாநல்லுாரை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டவர்கள் திருப்பூர் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர் அந்த மனுவில் பெருமாநல்லுாரை சேர்ந்த மணிமாறன், அவரது மனைவி சுகன்யா மற்றும் உறவினர்கள் ஆகியோர், ஊஞ்சப்பாளையம், திருமலை நகரில், 2 சென்ட் இடத்தில், வீடு கட்டி கொடுப்பதாக விளம்பரம் செய்தனர். இதை நம்பி பலரும், முன்பணமாக, 50 ஆயிரம் ரூபாய் கட்டினர். தொடர்ந்து, வீடு கட்டி கொடுக்க, 8 லட்சம் முதல், 11 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்தனர்.இதுவரை, வீடு கட்டி கொடுக்கவில்லை. 

பெருமாநல்லுாரில் உள்ள மணிமாறன் அலுவலகத்துக்கு சென்று பார்த்த போது, பூட்டி கிடந்தது.மொபைல் போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே, மோசடி தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.இவ்வாறு, அதில் அவர்கள் கூறியுள்ளனர்.Trending Now: