வீட்டு வாசலில் கோலம்போட்ட பெண்ணிடம் செயின்பறிப்பு முயற்சி, சிசிடிவி கேமராவில் சிக்கிய கொள்ளையர்கள், தேடுதல் வேட்டையில் போலீஸ்

02-08-2020 06:01 PM

நெல்லை பழையபேட்டை காந்திநகர் ராணி அண்ணா   பெண்கள் கல்லூரி எதிரே இன்று காலை நடந்த செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மூவரை பிடிக்க   வந்தவரை அரிவாளை காட்டி மிரட்டி விட்டு கொள்ளையர்கள் தப்பும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

நெல்லை பழையபேட்டை காந்திநகரை சேர்ந்தவர்.சண்முகநாதன் .இவரது மனைவி  செல்வரத்தினம்.இன்று காலை செல்வரத்தினம் வீட்டு வாசலில்  கோலம் போட்டு கொண்டு இருந்த போது பல்சர் வாகனத்தில் வந்த மூன்று பேரில் இரண்டு பேர் அவரது கழுத்தில் இருந்த 9 பவுன் நகையை பறிக்க முயன்றனர். அவர் நகையை கெட்டியாக பிடித்து கொண்டு சத்தம் போட்டதால் வீட்டில் இருந்த அவரது மகன் நடராஜன் ஓடி வரவே அந்த இரண்டு பேரும் தள்ளி நின்ற இரண்டு சக்கர வாகனத்தை நோக்கி ஓடினர்.

 நடராஜனும் துரத்தவே அவர்கள் கொண்டு வந்த அரிவாளைய கொண்டு வெட்டுவது போல் மிரட்டி அவரை கீழே தள்ளி இருசக்கர வாகனத்தில் 3 பேரும் வேகமாக அந்த இடத்தை விட்டு தப்பி ஓடுகின்றனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அந்த பல்சர் இரு சக்கர வாகனத்தை பேட்டை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் வந்தவர்களின் மூன்று பேரில் இரண்டு பேர் முகமூடி அணிந்து ஒருவர் சாதாரண உடையிலும் உள்ளார் அவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்Trending Now: