ஒரு கோடி புதிய ஓட்டுகள் பாஜவுக்கு! இல. கணேசன் நம்பிக்கை

25-04-2016 09:59 AM

மதுரை

ஒரு கோடி புதிய வாக்காளர்கள் பாஜவுக்கு ஆதரவு தருவார்கள் என்று அகில இந்திய பொதுச் செயலாளர் இல.கணேசன் கூறினார். 

மதுரை மத்திய தொகுதியில் பாஜ தேர்தல் அலுவலகத்தை திறந்து வைப்-பதற்--காக மதுரை வந்த பாஜ அகில இந்திய பொதுச் செயலாளர் இல. கணேசன், நிருபர்களிடம் கூறியதாவது: குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த-போது, 4 பேர் கொண்ட கும்பல் அவ-ரைக் கொல்ல முயற்சித்தது. போலீஸ் விசார-ணையில் ஒரு பெண் சிக்கினார். அப்--போது அந்தப் பெண்ணுக்கு ஆதர-வாக காங்கிரசார் அறிக்கை விடுத்த-னர். அந்-தப் பெண் லஸ்கர் இ தொய்பா என்ற தீவிரவாத இயக்கத்தைச் 

சேர்ந்--தவர் என்று தெரிந்ததும் காங்கிர

சார் பின்வாங்கிவிட்டனர். இதை மறைப்--ப-தற்காக அப்போது உள்துறை அமைச்-சராக இருந்த ப.சிதம்பரம், இது தொடர்-பான கோப்புகளை திருத்தி-னார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ப.சிதம்--பரத்தின் இந்த செயல் வெட்கக்-கேடானது. இதுபோல தான் காங்கிரசார் எப்போதும், தேசவிரோத சக்திகளை ஊக்குவிக்கின்றனர்.

கர்நாடகாவில் உள்ள ஒரு நுõலகத்-தில் அடிதடி நடந்து, புத்தகங்கள் வெளியே வீசப்பட்டுள்ளன. அதில் சம்-பந்தப்-பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நுõலகத்துக்கு நான் நடத்தி வரும் ‘பொற்றாமரை இயக்-கம்’ சார்பில் 100 நுõல்கள் வழங்க உள்ளேன். 

மோடி மீது தமிழக மக்கள் அதிக பற்று வைத்துள்ளனர். கடந்த லோக்சபா தேர்தலில் மோடி பிரதமராக வேண்டும் என்று தமிழகத்தில் 19 சதவீத ஓட்டுகள் பதிவானது. இதில் 10 சதவீதம் எங்களுக்குரியது என்று உரிமை கோர எங்களுக்கு உரிமையுள்ளது. ஒரு கோடி புதிய வாக்காளர்கள் பாஜவுக்கு ஆதரவு தருவார்கள்.

6 சதவீத ஓட்டு இருந்தால்தான் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று மக்கள் நலக்கூட்டணியில் உள்ள கட்சியினர் இணைந்திருக்கின்றனர். இது மக்கள் நலனுக்காக அமைந்த கூட்டணி அல்ல. தங்கள் கட்சிகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதற்காக இணைந்த கூட்டணி. தமிழகத்தில் திமுக, அதிமுக வேண்டாம் என்று நினைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்கள் பாஜவுக்கு தான் ஆதரவு அளிப்பார்கள். இதனால் வரும் தேர்தலில் பாஜ வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இவ்வாறு கூறினார்.