மசாஜ் சென்டரில் விபச்சாரம்:இருவர் கைது

07-07-2020 10:57 PM

கோவை,

கணபதி சக்திசாலையில் ரோஸ் ஸ்பா என்ற பெயரில் மசாஜ் சென்டர்  இயங்கி  வந்தது.இங்கு கொரோனா ஊரடங்கு சமயத்திலும் ஏராளமான ஆண்கள் வந்து செல்வதாக அருகில் உள்ளவர்கள் சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த மசாஜ் சென்டர் நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்து வந்தனர்.அப்போது வரும் ஆண்கள் பெண்களுடன்  உல்லாசமாக இருக்க அனுமதித்ததை கண்டுபிடித்தனர்.இதையடுத்து போலீஸ் ஒருவர் மாறுவேடத்தில் வாடிக்கையாளர் போல அங்கு சென்றார்.அப்போது அங்கிருந்த ஊழியர்கள் தங்களிடம் இருக்கும் பெண்கள் மற்றும் அதற்குரிய கட்டணத்தை கூறியுள்ளனர்.இதையடுத்து மறைந்திருந்த போலீசார் அங்கு அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.அப்போது விபச்சாரம் நடப்பதை உறுதி செய்தனர்.தொடர்ந்து மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சார விடுதி நடத்திய பொள்ளாச்சியை சேர்ந்த ரங்கன் என்பவரின் மகன் கார்த்திக் (22), கோவை கணபதியை சேர்ந்த ரவி என்பவரின் மகன் சுந்தர்ராஜ் (26) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.மேலும் அங்கு விபச்சாரத்திற்காக பயன்படுத்தப்பட்ட வையம்பாளையம் பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசனின் மனைவி  கவிதா (25), அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த காமராஜின் மனைவி ஜெனிபிர் (28), பேரூரை சேர்ந்த கிஷோரின் மனைவி வனஜா (43), மன்னார்குடியை சேர்ந்த கார்த்திகேயன் மனைவி மது (26) ஆகிய நான்கு பெண்களையும் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.Trending Now: