வத்தலகுண்டில் எல்ஐசி ஏஜென்ட்டும் அவர் மனைவியும் தற்கொலை *போலீசார் விசாரணை.

01-07-2020 01:23 PM

 திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் எல்ஐசி ஏஜென்ட்டும்,அவரது மனைவியும்  ஒரே அறையில் இன்று தற்கொலை  கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு கே.கே நகர் ,  முத்துராமலிங்கம் தேவர் நகரைச் சேர்ந்தவர் மகுடீஸ்வரன், 52. எல்ஐசி ஏஜென்ட். இவரது மனைவி சிவகாமி , 48 .இவருக்கு காயத்ரி என்ற மகள் உண்டு. மகளை திருவண்ணாமலை    அருகே திருமணம் செய்து வைத்தனர். அவருக்கு ஒரு குழந்தை உண்டு .மகள் வாழ்வில் பிரச்சினையால் கணவரை விட்டுப் பிரிந்து வத்தலகுண்டில் தாய், தந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று காலையில் ஏஜெண்ட்டும், அவர் மனைவியும் தூங்கிய அரை நெடுநேரம்  திறக்கப்படாததால், மகள் காயத்ரி அருகில் இருந்தவர்களை அழைத்துள்ளார். இதையடுத்து  அருகிலிருந்தவர்கள் வந்து கதவை உடைத்து பார்த்தபோது கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடலை கைப்பற்றிய வத்தலக்குண்டு போலீசார், இவர்கள் தற்கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.
Trending Now: