கத்தியுடன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பு... வைரலாகும் வீடியோவால் பரபரப்பு ...

28-06-2020 12:58 PM

அவனியாபுரத்தில் பழிக்குப்பழியாக நடைபெற்றது முத்துச்செல்வம் (எ) அவா கொலை - "அவா" இறுதி ஊர்வலத்தில் நண்பர்கள் சாமியை சாச்சவனை யாருவிட்டதடா என்ற வாசகத்துடன் கையில் கத்தியுடன் விடியோ ஒன்று அவனியாபுரம் பகுதி முழுவதும் இணையதளத்தில் வலம் வருவதால் மீண்டும் பதற்றம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் அருகே தந்தை பெரியார் நகர் பகுதியில் வசித்து வருபவர் குட்டி (எ) கருப்பையா இவரது மகன் அவா (எ) முத்துச்செல்வம். இவர மீது அவனியாபுரம் போலீஸ் நிலையம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது.  முத்துச்செல்வம் மீது கடந்த வருடம் நடைபெற்ற மாரி என்பவரது கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


முத்துச்செல்வம்  தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தந்தை பெரியார் நகர் பகுதியில் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் வாசலில் வந்து கொண்டிருக்கும் போது மாரியின் ஆதரவாளர்கள் 5 நபர்கள் கொண்ட கும்பல் ஆயுதங்களை வைத்து முத்துச்செல்வம் தலையில் வெட்டினர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த முத்து செல்வத்தை தலையை தனியாக அறுத்து கொடூரமாக கொலை செய்து கோயில் வாசலில் விட்டு விட்டு அப்பகுதியிலிருத்து அந்த கும்பல் தப்பித்து சென்றுள்ளனர்.


உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பெத்துராஜ் உதவி ஆணையர் ராமலிங்கம் கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்தனர்.

உடனடியாக முத்து செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தற்போது நடந்துள்ள முத்துச்செல்வம் கொலை மாரி என்பவரது கொலைக்கு பழிக்குப் பழியாக நடந்தது என காவல்துறையினர் முதல்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.


மேலும் முத்துச்செல்வத்தை கொலை செய்த மாரி ஆதரவாளர்கள் அன்பு, கார்த்தி, பாட்ஷா என்ற சரவணன், முத்துராஜா ஆகியோரை அவனியாபுரம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர் மேலும் நீதி என்ற நபரை தேடி வருகின்றனர் மேலும் கைது செய்யப்பட்ட நான்கு நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற முத்துச்செல்வம் (எ) அவா இறுதி ஊர்வலத்தில் முத்து செல்வத்தின் நண்பர்கள் சாமியை சாச்சவனை யாருவிட்டதடா என்ற வாசகத்துடன் கையில் கத்தியுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ அவனியாபுரம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பழிக்குப்பழியாக நடைபெற்று வரும் கொலை சம்பவங்களை தடுத்து நிறுத்த அவனியாபுரம் காவல்துறையினர் வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவனியாபுரம் பொது மக்களின் கருத்தாக உள்ளது. மேலும் கத்தியுடன் இணையதளங்களில் உலா வரும்  வீடியோ அவனியாபுரம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Trending Now: