அம்மா இரு சக்கர வாகனம் வேண்டுமா? விண்ணப்பிக்க வாங்க!

04-06-2020 09:29 PM

பாளையங்கோட்டை , நெல்லை  மாநகராட்சியில் “அம்மா இருசக்கர வாகனத்திட்டத்தில்” பயனடைய விரும்பும் பெண்கள் வருகின்ற 15.06.2020-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில்

 “அம்மா இருசக்கர வாகனத்திட்டத்தின் கீழ்” திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான இலக்கீடு 680-ல் இதுவரை 321 இருசக்கர வாகனங்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மகளிர் மேம்பாட்டு நிறுவனத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்போது, இலக்கீட்டினை நிறைவு செய்யும் வகையில் திருநெல்வேலி மண்டலத்திற்கு 57-ம், தச்சநல்லூர் மண்டலத்திற்கு 50-ம், பாளையங்கோட்டை மண்டலத்திற்கு 130-ம், மேலப்பாளையம் மண்டலத்திற்கு 122-ம் என மொத்தம் 359 “அம்மா இருசக்கர வாகனம்”  உள்ளது. 

இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் உரிய பயனாளிகளிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. அதன்படி, “அம்மா இருசக்கர வாகனம்”; பெறுவதற்கான ஆவணங்களின் நகல்களான ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருப்பின் அதற்கான இனச்சான்றிதழ், குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்விக்கான கல்வி தகுதிச்சான்றிதழ், பணிபுரிவதற்கான சான்றுடன் கூடிய ஊதியச்சான்று, சுயதொழில் மூலம் பெறும் வருவாய்க்கான சுய அறிவிப்பு சான்று, வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், பணிபுரியும் நிறுவனத்தின் அடையாள அட்டை, முன்னுரிமை அடிப்படையில் மகளிரைக்குடும்பத்தலைவியாகக் கொண்ட குடும்பம், ஆதரவற்ற மகளிர், மாற்றுத்திறனாளி பெண், ஆதரவற்ற விதவைப் பெண், 35-வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத பெண், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், திருநங்கை, மலைப்பாங்கான மற்றும் தொலைதூரத்தில் வசிக்கும் பெண் ஆகிய அனைத்துத் தகவல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் பெண்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சார்ந்த பெண்கள், தனியார் பள்ளி ஆசிரியைகள், தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பெண்கள், அனைத்து தனியார் அமைப்புகளில் பணிபுரியும் பெண்கள் என உரிய பயனாளிகள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கேட்டுக்கொண்டுள்ளார் . 

இத்திட்டத்திற்கான விண்ணப்பப் படிவங்களை அந்தந்த மண்டல அலுவலங்களில்இலவசமாகப் பெற்றுக்கொண்டு உரிய விபரங்களின்படி, பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட உதவிஆணையர் அலுவலங்களில் வருகின்ற 15.06.2020 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார் .Trending Now: