ராஜபாளையம் அருகே கூலி தொழிலாளி வெட்டிக்கொலை போலீசார் குவிப்பு!

03-06-2020 10:38 AM

ராஜபாளையம் அருகே அரிசி ஆலையில் பணிபுரிந்த கூலித்தொழிலாளி மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை இச்சம்பவத்தால்  பதற்றம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில்  போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே  உள்ள ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் இவர் அதே பகுதியில் உள்ள தனியார் அரிசி ஆலையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். 

இவர் நேற்று வேலைக்கு சென்று நீண்டநேரம் வீடு திரும்பாத நிலையில் மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடப்பதாக  உறவினருக்கு தகவல்  கிடைத்துள்ளது. இந்த தகவலை அப்பகுதி பொதுமக்கள் சேத்தூர் ஊரக காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். 

புகாரின் பேரில் சேத்தூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனின் உடலை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து கண்ணனை அரிவாளால் வெட்டி கொன்ற கும்பல் யார் என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இந்த கொலைக்கு முன்பகை காரணமா அல்லது வேறு ஏதும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதி பெரும் பதட்டமாக உள்ளதாள் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.Trending Now: