பேருந்துகள் துவக்கம் கண்ணாடி உடைப்பு.

01-06-2020 06:22 PM

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து இன்று ஆலங்குடிக்கு சென்ற பேருந்துவின் கண்ணாடி உடைப்பு.

தமிழக அரசு 50 சதவீத பேருந்துகளை இயக்க அனுமதி அளித்ததை தொடர்ந்து இன்று புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆலங்குடிக்கு ஒரு பேருந்து

 சென்று கொண்டிருந்தது அந்த பேருந்து பழைய பேருந்து நிலையம் அருகே வந்த போது பெண் ஒருவர் பேருந்தை நோக்கி கல்லை தூக்கி எரிந்ததில் கல் பேருந்தின் முகப்பு கண்ணாடியில் பட்டது இதில் முகப்பு கண்ணாடி சுக்குநூறாக நொறுங்கியது.


இதனால்  பேருந்தில் இருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு பேருந்திலிருந்து இறங்கி ஓட தொடங்கினர். மேலும் அந்த பெண் யார் என்று விபரம் தெரியவில்லை பேருந்தில் கல்லை தூக்கி எரிந்து விட்டு உடனடியாக அங்கிருந்து அந்த பெண் தப்பிச் சென்றுவிட்டார்.


இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து நகர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.Trending Now: