கொடைக்கானலில் தங்கியிருந்த ஐந்து பேர் சிக்கினர் தங்கியிருந்த காட்டேஜ்க்கு சீல் வைப்பு

29-05-2020 03:48 PM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மருத்துவ இ .பாஸ் மூலம் தங்கியிருந்த கரூரைச் சேர்ந்த ஐந்து வேளை 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலாத் தலமாகும் .இங்கு ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள். தற்போது ஊரடங்கு உத்தரவால் கொடைக்கானலுக்கு பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில்கொரோனா தொற்றால்  128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கொடைக்கானல் தாலுகாவில் யாரும் இதுவரை பாதிக்கப்படவில்லை. இதனால் அந்தப் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொடைக்கானல் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருவது தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.  இந்நிலையில் கரூரைச் சேர்ந்த ஐந்து பேர் கொடைக்கானலில் மருத்துவம் பார்க்க செல்வதாகக் கூறி பாஸ் பெற்று நாயுடுபுரம் பகுதியில் ஒரு காட்டேஜில் தங்கியிருந்தனர். இது இதுகுறித்து ரகசிய தகவல் அறிந்த போலீசார் மற்றும் நகராட்சி யினர் அந்த 5 பேரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் எந்த மல்டி ஸ்பொஷலிட்டி ஆஸ்பத்திரியும் இல்லை .ஆனால் மருத்துவம் பார்ப்பதாக கூறி,  சுற்றுலாப்பயணிகள் தொடர்ந்து வருவது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.Trending Now: