பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதால் பரபரப்பு.

28-05-2020 07:05 PM

திருப்பூரில் நேற்று  காலை வெடி வெடித்தது போன்ற பயங்கர சத்தம் பல இடங்களில் கேட்டதால், மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் மாவட்டத்தில், காங்கேயம், பல்லடம், அருள்புரம், மங்களம், அவினாசிபாளையம், பொங்கலூர், கொடுவாய், அனுப்பர்பாளையம், நெருப்பெரிச்சல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை 10: 30 மணியளவில் வெடிவெடிப்பது போன்ற பயங்கர சத்தம் கேட்டது. இதனால், அச்சமடைந்த மக்கள், அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியே வந்து பார்த்தனர். நிலநடுக்கம் ஏதும் ஏற்பட்டிருக்கலாமோ எனவும் அச்சம் தெரிவித்தனர்.  வெடிச்சத்தம்  குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இவ் வெடிச்சத்தம் குறித்து சேலம் வானிலை மைய அதிகாரிகளிடம் கேட்ட போது, திருப்பூரில் "நிலநடுக்கம் போன்ற எந்த அதிர்வுகளும் பதிவாகவில்லை. வேறு  ஏதாவது வெடி  சத்தமாக இருக்கலாம்" என்றனர். நேற்று திடீரென்று காலை பயங்கர வெடி சத்தம்     திருப்பூரில்  அனைத்து தரப்பு மக்களையும் பெரும்  அச்சத்திலும், பரபரப்பிலும் ஆழ்த்தியது.Trending Now: