திண்டுக்கல் ரயில்வே தண்டவாளம் அருகே செல்ல வேண்டாம்தென்னக ரயில்வே அறிவிப்பு

27-05-2020 01:37 PM

திண்டுக்கல் _ஈரோடு தண்டவாள உறுதித்தன்மையை ஆய்வு செய்யும் பொருட்டு இன்று அதிக அதிவேக ரயில் இயக்கப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் தண்டவாளம் அருகே செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது . கடந்த 55 நாட்களாக ரயில் இயக்கப்படவில்லை. இந்நிலையில் ஜூன் 1ஆம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிகிறது.  இந்நிலையில் திண்டுக்கல் ஈரோடு இடையே தண்டாவள உறுதி தன்மையை  அதி வேகத்தில்  ரயில் இயக்கி ஆய்வு செய்யப்படுகிறது. 

இதனால் இன்று காலை 8.00 மணி முதல் இரவு 12.00 மணி வரை பொதுமக்கள் யாரும் தண்டவாளம் அருகே செல்ல வேண்டாம். இவ்வாறு தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.Trending Now: