ராஜபாளையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் விவசாய இயந்திரங்களை உற்பத்தி குழுக்களுக்கு வேளாண்மை இணை இயக்குனர் வழங்கினார்.

23-05-2020 12:51 PM

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சுற்றுவட்டார கிராமங்களில் அதிக அளவில்  விவசாயம் நடைபெற்று வருகின்றது. இவர்களுக்கு அரசு சார்பில் மானியமாக உழவர் உற்பத்தி குழுக்களுக்கு கூட்டு பண்ணை திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பில் விளை நிலங்களில் மருந்து தெளித்தல், நாற்று நடுதல், வறப்புகளை மேம்படுத்துதல் மற்றும் சொட்டு நீர் பாசனத்திற்க்கு உதவும் இயந்திரங்களை ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வைத்து வேளாண்மை இணை இயக்குநர் சங்கர் அவர்கள் உழவர் உற்பத்தி குழுவில் உள்ள விவசாயிகளுக்கு வழங்கினார். இதன் மூலம்  ஏராளமான விவசாயிகள்  பயனடைந்தனர். மேலும் மானியம் மூலம் வழங்கப்படும் இயந்திரங்களால் வரும் காலங்களில் விவசாயத்தினை மேம்படுத்த உதவுவதாக விவசாயிகள் கூறினர். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.Trending Now: