விருதுநகர் மாவட்டம் நிவாரண உதவி

23-05-2020 12:44 PM

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வறுமையில் வாழும் 250 க்கும் மேற்பட்ட உடல் ஊனமுற்றவர்கள் குடும்பத்திற்க்கு அதிமுக சார்பில் அத்தியாவசிய உணவு பொருட்களை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா வழங்கினார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்  காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக சார்பில் வறுமையில் வாழும் 250 க்கும் மேற்பட்ட உடல் ஊனமுற்றவர்கள் குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி,மளிகைப் பொருள்கள் மற்றும் 500 ரூபாய் ஊக்கத்தொகை உள்ளிட்டவைகளை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா தனியார் மண்டபத்தில் வைத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.Trending Now: