பசியின் கொடுமை இறந்து கிடந்த நாயை சாப்பிட்ட கொடூரம் சோதனையும் வேதனையும்!

23-05-2020 12:36 PM

நாகர்கோவில், உலகை ஆட்டிப்படைக்கும் வைரஸ் மனித வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வீட்டுக்குள் முடங்கி கிடந்தால் பசி ஒரு பக்கம் பணம் ஒரு பக்கம் அவர்களை விரட்டுகிறது.

ஒரு மனிதனை பசி எப்படி எல்லாம் வாட்டி வதைக்கும் அதன் அடுத்த கட்டம் என்ன என்பதை உணர்ந்தவர்களுக்கு தான் தெரியும். அல்லது அதில் அடி பட்டவர்களை பார்த்தால் புரியும்.டெல்லி - ஜெய்ப்பூர் சாலையில் அடிபட்டு இறந்து கிடந்த நாயின் உடலை பசிக்கொடுமையில் சிக்கிய ஒருவர் சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இதுதொடர்பாக, ஜெய்ப்பூரை சேர்ந்த பிரதுமன் சிங் நருகா என்பவர் யூடியூப்பில், கடந்த 18-ம் தேதி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், டெல்லி நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அப்போது, சாஹபுரா பகுதியில் சாலையில் ஒருவர் இறந்த நாயின் உடலை சாப்பிட்டுக் கொண்டிருப்பதை காண்கிறார். அவரருகே சென்ற பிரதுமன் சிங் நருகா, “உங்களுக்கு சாப்பிட உணவு இல்லையா? நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்? என அந்த மனிதரைக் கூச்சலிட்டு, சாலையின் ஓரத்தில் காத்திருக்கச் சொல்கிறார். அதன்பின் அவரை அணுகிய நருகா, அவருக்கு உணவு மற்றும் தண்ணீரை வழங்குகிறார்.

இந்த வீடியோவை கண்ட பலரும் தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர்.Trending Now: