மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி சிகை அலங்காரம் கடைகள் அனுமதி

23-05-2020 12:31 PM

முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் இன்று முதல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் இன்று (24 ம் தேதி) முதல் தினமும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில்  இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.  ஏற்கனவே கடந்த 19 ம் தேதி முதல் ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி ஊரக பகுதிகளில் உள்ள முடி திருத்தும் நிலையங்கள் இயங்கி வருகிறது. இந்த நிலையங்களில் பணியாற்றுபவர்களுக்கோ, வடிக்கையாளர்களுக்கோ காய்ச்சல், சளி, இரும்மல் அறிகுறிகள் இருந்தால் அவர்களை அனுமதிக்க கூடாது. ஒரு நாளைக்கு 5 முறை கிருமி நாசினி அடிக்க வேண்டும். குளிர்சாதன வசதி இருந்தால் உபயோகிக்க கூடாது போன்ற பல நிபந்தனைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.Trending Now: