60 நாட்களுக்கு பிறகு.. ஓடியது ஆட்டோ.. ஒரு ஆட்டோவில் ஒரு பயணி தான்..!

23-05-2020 11:58 AM

நெல்லையில் 60 தினங்களுக்கு பின் ஆட்டோக்கள் ஓடத்தொடங்கியது, அரசின் விதிமுறைப்படி ஒருவர் மட்டுமே ஆட்டோவில் பயணித்தனர். மேலும் ஆட்டோவில் கூடுதல் பயணிகள் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என ஆட்டோஓட்டுனர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

 கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த மார்ச் 23- ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பொதுபோக்குவரத்து நிறுத்தப்பட்டு

நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனையடுத்து 4- ம் கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட நிலையில்  பல தளர்வுகள் செய்யப்பட்டுள்ளது, கடைகள், சில வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் உள்ளன, இந்த தொழிலை நம்பி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் உள்ளனர். இவர்கள் கடந்த 55 நாட்களுக்கு மேலாக தொழில் இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தனர். மேலும் ஆட்டோக்களை இயக்க அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தனர். இந்நிலையில் தமிழக அரசு ஒரு பயணியுடன் ஆட்டோக்களை இயக்க அனுமதி வழங்கியது. இதனைத்தொடர்ந்து நெல்லை மாநகர் மற்றும் மாவட்ட பகுதியில் 60 நாட்களுக்கு  பின் இன்று காலை முதல் இயங்கத் தொடங்கின. ஆட்டோக்களில் ஒரு பயணி மட்டும் விதிமுறைகளுக்கு உட்பட்டு சானிடைசர் உள்ளிட்ட நோய்தடுப்பு மருந்துகள் கொடுத்து  ஏற்றினர்.  பேருந்து, ரெயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து தொடங்கப்படாதால் குறைந்த அளவிலேயே ஆட்டோக்கள் இயங்குகின்றன.  ஆட்டோக்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி என்றாலும் ஒரு பயணியை ஏற்றுவதால் நஷ்டமே ஏற்படுகிறது , எனவே அரசு கூடுதல் பணிகளை ஏற்ற அனுமதிக்க வேண்டும் என ஆட்டோதொழிலாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.Trending Now: