சிவகாசி அரசுமருத்துவமனையில் தொற்று உறுதி செய்யப்பட்ட 13'பேருக்கு சிகிச்சை

23-05-2020 10:39 AM

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர், கடந்த 18'ம் தேதி டெல்லியிலிருந்து திருநெல்வேலி வந்த சிறப்பு ரயிலில் வந்தனர். அந்த குழுவைச்சேர்ந்த 172' பேர், சிவகாசி விருதுநகர் சாலையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தனிமைப்படுத்தப் பட்டனர். அதில் அறுபது பேருக்கு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினர், ரத்த மாதிரி உள்ளிட்ட பரிசோதனைகள் செய்தனர். சோதனைகள் முடிவில் 13' பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று உறுதி செய்யப்பட்ட 13' பேரையும் சிவகாசி அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.Trending Now: