தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்ட 3 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

23-05-2020 10:34 AM

தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக கீழக்கரையைச் சேர்ந்த பிச்சை கனி, விழுப்புரம் மணல்மேட்டைச் சேர்ந்த அருண்குமார்,  கடலூர் மாவட்டம் குண்டூரைச் சேர்ந்த முகம்மது அலி(எ)மணிகண்டன், உள்ளிட்டோரை தேவிபட்டிணம் போலீசார் பிப்ரவரியில் கைது செய்தனர். இவர்கள் 3 பேரும் தங்களுக்கு ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஜாமீன் கோரிய 3 பேரின் மனுவை தள்ளுபடி உத்தரவிட்டார்.Trending Now: