55 வயதானவர்களுக்கு 100 நாள் வேலை மறுப்பு ஊராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

22-05-2020 10:58 PM

தேனி , 100 நாள் வேலை திட்டத்தில் 55 வயது நிறைவடைந்த பெண்களுக்கு பணி வழங்க கோரி ஊராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். தேனி மாவட்டம் போடி ஊராட்சி ஒன்றியத்தில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளில் 55 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறி பணி வழங்க மறுக்கப்படுகிறது.

இந்த நிலையில் போடி அருகே உள்ள சிலமலை ஊராட்சியில் வேலை உறுதி திட்டத்தில் 55 வயது நிறைவடைந்த அவர்களுக்கும் பணி வழங்கக்கோரி ஊராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். வேலை இல்லாததால் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய இருப்பதாகவும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பணியாற்ற விரும்புவதாக அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.

போடி வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன் சாந்தி, போடி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 55 வயது நிறைவடைந்த அவர்களுக்கு நோய் தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் நிவாரண உதவிகள் கிடைக்க பரிந்துரை செய்யப்படும் என்று கூறி சமாதானப்படுத்தினர்.Trending Now: