குடிமராமத்து பணி துவக்கம்

22-05-2020 10:51 PM

சாலைகிராமத்தில் 1 கோடியே 40 லட்சம் மதிப்பிலான குடிமராமத்து பணிகளை அமைச்சர் பாஸ்கரன் துவக்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சாலைகிராமத்தில் உள்ள பெரியகண்மாய் தூர்வாரும் பணியினை ரூபாய்1 கோடியே 40 லட்சம் மதிப்பில் அமைச்சர் பாஸ்கரன் துவக்கி வைத்தார். சாலைக்கிராமத்தில் உள்ள பெரிய கண்மாய், 336 ஹெக்டேர் பரப்பளவு உள்ள கண்மாயிக்கு இரண்டு கலுங்குகள் 7 மடைகள் பணிகள் செய்யபடுகின்றன.

இந்நிலையில்  சிவகங்கை மாவட்டத்திலே சாலைக்கிராமத்தில் சுமார் 1கோடியே 40 லட்சத்திற்க்கு இந்த நிதியாண்டின் முதலாவது குடிமராத்து பணிகளை இன்று கதர் மற்றும் காதித்துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.

இதில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.Trending Now: