சென்னை விருகம்பாக்கத்தில் வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குடியிருப்பு வளாகத்தின் அருகில் நடந்த சம்பவம்

22-05-2020 06:36 PM

சென்னை விருகம்பாக்கத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வசிக்கும் குடியிருப்புக்கு எதிரில் உள்ள காலி மைதானத்தில் வாலிபர் ஒருவர் சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, வடபழனி, பஜனைக்கோவில்தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 25). இவர் மீது மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் கொள்ளை வழக்கு உள்ளது. 

நேற்று இரவு விருகம்பாக்கத்தில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குடியிருப்புக்கு (டாய்ஷா) எதிரில் உள்ள காலி மைதானத்தில் ரத்தவெள்ளத்தில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக தகவல் கிடைத்ததும் விருகம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

போலீசார் நடத்திய விசாரணையில் கொலையை அரங்கேற்றியது ரமேஷின் இறந்து போன நண்பனாகிய அஜித்தின் அண்ணன் தேவா மற்றும் அவரது கூட்டாளிகள்  கோழி பாபு (20), கொரிலா (எ) சஞ்சய் (20), மாவாட்டி (எ) மணிகண்டன் (19), அலர்ட் ஆறுமுகம் (19),  விஜய் மற்றொரு விஜய் என்பது தெரியவந்தது. 

கடந்த ஏப்ரல் மாதம் ரமேஷ் தனது நண்பன் அஜித் உள்பட 3 பேருடன் செம்மஞ்சேரி ஏரியில் குளிக்கச் சென்றபோது  அஜித் நீரில் மூழ்கி இறந்து போனார். இதனால் ஆத்திரமடைந்த அஜித்தின் அண்ணன் தேவா, தனது தம்பியின் சாவுக்கு காரணமான ரமேஷை பழி வாங்கும் நோக்கத்துடன் ரமேஷை மது விருந்து தருவதாக விருகம்பாக்கம் ஐஏஎஸ், ஐபிஎஸ் குடியிருப்ப வளாகத்துக்கு எதிரில் உள்ள காலி மைதானத்துக்கு அழைத்துச் சென்று வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலையில் தொடர்புடைய ஒரு விஜய் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற 6 பேரையும் தேடி வருவதாக  போலீசார் தெரிவித்தனர்.Trending Now: