டிக் டாக் விளையாட்டு வினையானது பூனையை தொங்கவிட்ட இளைஞர்களுக்கு போலீஸ் ஆப்பு

22-05-2020 06:32 PM

நெல்லை மாவட்டம் பழவூர் அருகே பூனையை கட்டி அந்தரத்தில் தொங்கவிட்டு டிக் டாக் செய்த இளைஞரை  போலீசார் கைது செய்தனர்

நெல்லை மாவட்டம் பழவூர் அருகேயுள்ள செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் சுயம்பு  இவரது மகன் தங்கராஜ் பூனை ஒன்றை வளர்த்து வந்தார் தங்கராஜீக்கு டிக் டாக் செய்வது  அலாதி பிரியம் உள்ளவர் .அவ்வபோது தனது வீடியோக்களை பதிவு செய்வதை  வழக்கமாக கொண்டுள்ளார் இந்த நிலையில் அவர் வளர்த்த பூனை இறந்து விட்டது அந்த  பூனையை அந்தரத்தில் கயிற்றில் கட்டி   தொங்க விட்டபடி டிக் டாக் பதிவு செய்து சமூக வலைதளங்களில்  பரப்பி உள்ளார்.  இது வைரலாக பரவ காவல்துறை பார்வைக்கு சென்று விட்டது  இந்தநிலையில் மிருகவதை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து  தங்கராஜை பழவூர் போலீசார் கைது செய்துள்ளனர் தொடர்ந்து தங்கராஜ் இடம் பூனன இறந்ததா இல்லை கொல்லப்பட்டதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் நாளுக்கு நாள் டிக் டாக் மோகம் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் டிக்கி டாக் செய்வதற்காக செல்லப்பிராணிகள்  பயன்படுத்துவது   பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து  நெல்லை தென்காசி மாவட்டங்களில் டிக்டாக் செயலி மூலம் வனங்குகளை வேட்டையாடுவது போன்ற காட்சிகள் இளைஞர்களால் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தென்காசி மாவட்டத்தில் வனத்துறை சார்பில் இரண்டு வழக்கள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.Trending Now: