மருதங்கோட்டில் தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

22-05-2020 05:13 PM

மத்திய மாநில அரசுகளை கண்டித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிற்சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர். புதிய மின்சார சட்டதிருத்த மசோதாவை கைவிடவேண்டும், தொழிலாளர்  அனைவருக்கும் கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முழு சம்பளம் வழங்க வேண்டும், வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் முயற்சியை கைவிடவேண்டும், மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு, தொ.மு.ச, ஐ.என்.டி.யு.சி, எ.ஐ.டி.யு.சி போன்ற தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மார்த்தாண்டம், மருதங்கோடு, மேல்புறம், திக்குறிச்சி, ஞாறாம்விளை, அருமனை போன்ற பகுதிகளில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் சிங்காரன், பாலகிருஷ்ணன், ஜெஸ்டின் விஜயகுமார், ஷைனி கார்ட்டன், ரூபன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை மார்த்தாண்டம் போலீஸ் எஸ்ஐ சிவசங்கரன் தலைமையிலான போலீசார் கைது செய்து கழுவன்திட்டையில் உள்ள மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். பிற்பகலில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.Trending Now: