ஜார்கண்ட் மாநிலத்திற்கு தொழிலாளர்கள் செல்ல ஏற்பாடு

22-05-2020 05:09 PM

கல்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து 2 மாணவிகள் உட்பட 40 பேரை ஜார்கண்ட் மாநிலத்துக்கு  வட்டாட்சியர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக மேற்கு வங்காளம், பீகார், ஒரிசா, ஜார்கண்ட் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து திரளான தொழிலாளர்கள் இடம் பெயர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். கூடவே பலர் கல்லூரிகளிலும் படித்து வருகின்றனர். குமரி மாவட்டத்திலுள்ள அனேக ரப்பர் தோட்டங்கள் ரப்பர் தொழிற்சாலைகள் விவசாய தொழில், கிரானைட் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 60 நாட்களுக்கு முன் கொரோனா வைரஸ் மக்களை தாக்கிய நிலையில் மத்திய மாநில அரசுகள் சமூக இடைவெளியுடன் மக்கள் வாழ வேண்டும் என உத்தரவிட்டதால் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டது. பல மாணவிகள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இந்நிலையில் மாற்று மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல மத்திய மாநில அரசுகள் உத்தரவிட்டதன் அடிப்படையில் ரயில்கள் மூலம் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்கு புறப்பட்டு செல்கின்றனர். இந்நிலையில் திருவட்டார் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு உட்பட்ட சுருளகோடு பகுதியில் செயல்படும் ரப்பர் தொழிற்சாலையில் பணிபுரிந்த 9 தொழிலாளர்கள் மற்றும் திருவட்டார் யூனியனுக்கு உட்பட்ட கல்லூரியில் படித்த 2 மாணவிகள் ஆகியோரை வட்டாட்சியர் அலுவலர் அஜிதா பஸ் மூலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்தார். இது போன்று  கல்குளம் பகுதிக்குட்பட்ட பல்வேறு தோட்டங்களில் வேலை செய்த கூலி தொழிலாளர்கள் 29 பேரை அலுவலக வளாகத்தில் இருந்து பஸ் மூலம் வட்டாட்சியர் ஜெகதா அனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் மற்றும் காவல்துறையினர், தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஜார்கண்ட் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட 40 பேருக்கும் உணவு உள்ளிட்ட தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது.Trending Now: