அனுமதியின்றி மண் கடத்தல் டெம்போ பறிமுதல்

22-05-2020 05:02 PM

முளகுமூடு அருகே அனுமதியின்றி செம்மண் கடத்திய டெம்போவை பறிமுதல் செய்து 2 பைக் உட்பட 3 வாகனங்களை பறிமுதல் செய்து 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். கொரோனா வைரஸ் தாக்குதல் பாதுகாப்பு ரோந்து பணியில் தக்கலை சப்இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீஸ் படையினர் கோழிப்போர்விளை, முளகுமூடு, மற்றும் கூட்டமாவு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கூட்டமாவில் வந்து கொண்டிருந்த டெம்போவை தடுத்து நிறுத்தினர். டெம்போவை நிறுத்திய டிரைவர் அதில் இருந்து தப்பியோடிவிட்டார். அப்போது அந்த பகுதியில் டெம்போவுக்கு ஆதரவாக வந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்த போது அவர்களும் ஓடிவிட்டனர். இதனால் போலீசார் டெம்போ மற்றும் 2 பைக்குகளை தக்கலை காவல்நிலையம் கொண்டு வந்தனர். சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் விசாரணை நடத்தியதில் கூட்டமாவை சேர்ந்த டிரைவர் சால்வின், தேரிவிளையை சேர்ந்த சுபின், சக்கக்காவிளையை சேர்ந்த அருளப்பன், மற்றும் டெம்போவின் உரிமையாளர் உட்பட 4 பேர் மீது சப் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்தார்.Trending Now: