திருநெல்வேலி மாவட்டம் காருகுறிச்சி மண்பாண்டம் பேமஸ்! இப்போ.. நசிந்து நிற்குது?

22-05-2020 01:29 PM

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கொரோனா ஊரடங்கால் ஏற்றுமதி செய்ய முடியாமல் மண்பாண்டத் தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தேங்கமடைந்துள்ளதால் , தொழிலாளர் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் . ஏற்றுமதிக்கு அரசு அனுமதிக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி , கல்லிடைக்குறிச்சி , காருகுறிச்சி , கூனியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மண்பாண்டத் தொழிலுக்கு பெயர்பெற்றதாகும் . இங்கு 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் .தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடி்க்ககையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து தொழில்களும் முடக்கம் அடைந்துள்ளது. வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது 4-வது கட்ட ஊரடங்கில் தொழில்கள் மேற்கொள்ள சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மண்பாண்டத் தொழிலுக்கு எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை. மண்பாண்ட உற்பத்தி கோடை காலத்தில்தான் சீசனாகும் . இந்த காலங்களில் மண்பாண்டம் , பூ சாடி, தண்ணீர் ஜாடி, டம்ளார் ,  உள்ளிட்ட பொருட்கள் தயார் செய்து அதிக அளவில் கேரள மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம் . குறிப்பாக சேரன்மகாதேவி , கூனியூர் பகுதியில் எலெக்ட்ரிக் ரெப்ரிஜிரேட்டருக்கு இணையாக ஏழைகளின் குளிர்சாதன பெட்டி என கூறப்படும்  மண்பாண்ட குளிர்சாதனபெட்டி செய்யப்படுகிறது. இதில் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை இயற்கையாகவே பாதுகாத்துக் கொள்ள முடியும் . இதற்கு கேரளமாநிலம் மட்டும் அல்லா தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் இதற்கு வரவேற்ப அதிக அளவில் உள்ளது. தற்போது ஏராளமான பொருட்கள் தயாரிக்கப்பட்டு வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய தயாரான நிலையில் ஊரடங்கால் வாகனப்போக்குவரத்து தடை பட்டுள்ளதால் அனைத்து பொருட்களும் செய்யப்பட்ட இடத்திலேயே குவிந்து கிடக்கிறது. சில மண்பாண்ட தொழிற் கூடங்களில் வாகனங்களில் ஏற்றப்பட்டு  செல்ல முடியமல் அங்கே நிறுத்தப்பட்டுள்ளது.

ஏற்றுமதி செய்யமுடியாததால் கடந்த இரண்டு மாதகாலத்திற்கு முன்பு உற்பத்தி செய்யப்பட்ட  பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தொழிற் கூடங்களிலேயே தேங்கம் அடைந்து உள்ளது. எனவே மண்பாண்டப் பொருட்களை கேரள உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய அரசு அனுமதி வழங்க வேண்டும் , மேலும் அரசு மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு 1000 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கி உள்ளது. இது போதாது 50 நாட்களுக்கு மேலாக தொழில் இழந்து உள்ளதால் கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் மேலும் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அரசு காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் .Trending Now: