தூத்துக்குடி துப்பாக்கி சூடு இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்!

22-05-2020 01:24 PM

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு இரண்டாம் ஆண்டு நினைவுஅஞ்சலி  அனுசரிப்பு நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி கடந்த 2018ம் ஆண்டு மக்கள் குமரிட்டியபுரம், திரேஸ்புரம், பண்டாரம்பட்டி, மடத்தூர் அப்பகுதி மக்கள் 100 நாட்கள் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் கடைசி நாளான கடந்த 2018ம் ஆண்டு மே 22ஆம் தேதியன்று பனிமய மாதா ஆலயத்தில் இருந்து பேரணியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று  ஆட்சியரை சந்தித்து ஸ்டெர்லைட் ஆலையை நிறந்தமாக மூட கோரி கோரிக்கை மனு அளிக்க மக்கள் முடிவு செய்தனர். 

அதன்படி நடைபெற்ற பேரணியில் விவிடி சிக்னல் பகுதியில் தடி அடி நடத்தப்பட்டு  கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தை அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு  13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இன்று இரண்டாம் ஆண்டு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம், பாத்திமாபாபு தலைமையில் திரேஸ்புரம் பகுதில் துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் புகைபடத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.இதில்  தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தூத்துக்குடி மாவட்ட தலைவர் விநாயகமூர்த்தி, தூத்துக்குடி மீனவ கூட்டமைப்பு சார்பில் மற்றும் குமரேட்டியாபுரம், பண்டாரம்பட்டி,மடத்தூர் பகுதில் பொது மக்கள் மெலுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.Trending Now: