திருநெல்வேலி மாவட்டம் 4519 நபர்கள் சொந்த ஊருக்கு திரும்பினர்

21-05-2020 08:29 PM

நெல்லை மாவட்டத்தில்  பல்வேறு இடங்களில் பணிசெய்துவந்த பல்வேறு மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 4519 பேர் இதுவரையில் ரயில் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்  என மாவட்ட ஆட்சியர் ஷில்பாபிரபாகர்சதீஷ் தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

12-05- 2020 அன்று பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 1330 புலம்பெயர்ந்த தொழிலாளர்களும்  13-05-2020 அன்று ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 1426 புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் . இதுபோன்று பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 326 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 1437 தொழிலாளர்களும் சிறப்பு ரெயில் மூலம் அவர்கள் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் . மேலம் பல்வேறு மாநிலங்களில் பணி செய்து வந்த 727  தொழிலாளர்கள் நெல்லை மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் . மேலும் சாலை மார்கமாக நெல்லை மாவட்டத்திற்கு வந்த சுமார் 3200 நபர்களுக்கு மாவட்ட எல்கையில் கொரனா பரிசோதனை செய்யப்பட்டு தொற்று கண்டறியபட்டவர்கள் அரசு மருத்துவமனையிலும் முடிவு வந்தவர்கள் தங்களது வீடுகளில் 14 நாட்கள் தனிமை படுத்திகொள்ள அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.  வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டவர்களுக்கு  கபசுர குடிநீர் பொடி பாக்கட்டுகள் வழங்கப்பட்டுள்ளதோடு மாவட்ட அவசர கட்டுபாட்டு அறைமூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என ஆட்சியர் தெரிவித்துள்ளார் .Trending Now: