பாரதமாதா சிலை திடீர் உதயம் எதிர்ப்பு வலுத்தது சிலையை துணியால் மூடி போலீஸ் பாதுகாப்பு!

21-05-2020 04:59 PM

தென்தாமரைகுளம் அருகே அனுமதியின்றி வைக்கப்பட்ட பாரதமாதா சிலையை துணியால் மூடி போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

தென்தாமரைகுளத்தை அடுத்த காட்டுவிளை ஜங்ஷனில் உள்ள தனியார் கோவில் வளாகத்தில் சுமார் ஐந்தடி உயரம் கொண்ட பாரதமாதா சிலை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு  அமைக்கப்பட்டது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போலீசில் புகார் செய்தனர். இந்நிலையில் அந்த சிலையை அகற்றுமாறு  சிலை வைத்தவர்களுக்கு போலீசார் உத்தரவிட்டனர். ஆனால் சிலை அகற்றப்படாததால் நேற்று காலை அங்கு வந்த கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் தென்தாமரைகுளம் சப் இன்ஸ்பெக்டர் இராஜசேகர்,  கிராம நிர்வாக அதிகாரி கவிதா, செயல் அலுவலர் சசிகலா மற்றும் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு சிலையை  துணியால் மூடினர். இதுகுறித்து கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் செய்தியார்களிடம் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு கலவரத்திற்குப் பிறகு வேணுகோபால் பரிந்துரையின் படி குமரி மாவட்டத்தில் எந்த இடத்திலும்  சிலை வைக்க அனுமதி இல்லை.  இந்நிலையில் இந்த இடத்தில் கடந்த வாரம் ஒரு தரப்பினர் சிலையை வைத்துள்ளனர். இதற்கு இந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சிலையை நாங்கள் துணியால் மூடி நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்Trending Now: