இலங்கையில் இருந்து இந்தியர்களை அழைத்து வர கப்பல் ரெடி

20-05-2020 06:26 PM

தூத்துக்குடிகொழும்பு - தூத்துக்குடி கப்பல் இலங்கையில் உள்ள இந்திய மக்களை அழைத்து வர ஐ.என்.எஸ். ஜலஸ்வா கப்பல் ஜூன் 1 ஆம் தேதி இயக்கப்படுகிறது. இலங்கையில் இருந்து தாயகம் திரும்பும் இந்தியர்களை அழைத்து கொண்டு வர கப்பல் இயக்கப்பட உள்ளது

உலகெங்கும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் உள்ள இந்தியர்களை விமானம் மூலம்  அழைத்துவர மத்திய மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டு வருகிறது இந்நிலையில் இலங்கையில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் ஜலஸ்வா வரும் ஜூன் 1 ஆம் தேதி கொழும்புவில் இருந்து தூத்துக்குடி அழைத்து வரப்படுகிறார்கள் இவர்கள் இந்தியாவிற்குள் வரும் போது தூத்துக்குடி துறைமுக சுகாதாரத்துறையினரோடு இணைந்து மாவட்ட சுகாதார துறையினர் அவர்களை பரிசோதனை மேற்கொள்வர். கப்பலில் வரும் இவர்கள் பரிசோதனைக்கு பின்னர் தனிமைப்படுத்தப்படுவார்கள் என தெரிகிறதுTrending Now: