தூத்துக்குடி மாவட்டம் 300 மதுபாட்டில்கள் பறிமுதல் ஒருவர் கைது ஒருவர் எஸ்கேப்

20-05-2020 06:23 PM

திருச்செந்தூர் அருகே குரும்பூரில் வாகனத் தணிக்கையின் போது காரில் கடத்திய 300 மதுப்பாட்டில்கள் பறிமுதல் -  ஒருவர் கைது - டிரைவர் தப்பி ஓட்டம்.

திருச்செந்தூர் அருகே குரும்பூர் பஜாரில் தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு கூடுதல் கண்காணிப்பாளர் குமார் தலைமையில் தனிப்படை போலீசார் வாகனத் தணிக்கையில்  ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்ய முற்படும் போது திடீரென டிரைவர் தப்பியோடியுள்ளார்.

தொடர்ந்து காரை சோதனையிட்ட போது ரூ 36000, மதிப்புள்ள 300 மதுப்பாட்டில்கள் இருந்துள்ளன.அதனை கைப்பற்றி காரில் வந்த கலைச்செல்வன் என்பவரை விசாரித்ததில் ஏரல் அருகே கொற்கையில் உள்ள அரசு மதுபானக்கடையில் மொத்தமாக வாங்கி கூடுதல் விலைக்கு கள்ளத்தனமாக விற்பனை செய்ய கொண்டு சென்றதாக  கூறியதையடுத்து வழக்குப்பதிவு செய்து  அவரை கைது செய்ததோடு தப்பியோடிய டிரைவர் முத்துசெல்வத்தை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட கலைச்செல்வன் மீது குரும்பூர், நாசரேத், ஸ்ரீவைகுண்டம் திருச்செந்தூர் கோவில் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தியதாக சுமார் 17 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.Trending Now: