சென்னை மருத்துவக்கல்லுாரி மாணவி உயிரிழப்பில் மர்மம் விலகியது

19-05-2020 04:15 PM

சென்னை மருத்துவக்கல்லுாரி மாணவி மாரடைப்பால் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே 1ம் தேதி சென்னை கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி மாணவிகள் விடுதியில் மாணவி பிரதீபா சந்தேகமான முறையில் உயிரிழந்தார். உயிரிழந்த மாணவியின் உடலை பிரதே பரிசோதனை செய்ததில் முதற்கட்டமாக விஷம் அருந்தி தற்கொலை செய்யவில்லை என தெரியவந்தது.அவருக்கு கொரோனா சோதனையிலும் தொற்று இல்லை என அறிக்கை வந்தது. இந்நிலையில் அவரது உடல் பாகங்கள் தடய அறிவியல் துறைக்கு விஸ்ரா பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. சோதனை முடிவுகள் நேற்று வெளிவந்தது. அது தொடர்பாக போலீசார் தரப்பு கூறுகையில், ‘‘பிரேத பரிசோதனை இறுதி அறிக்கையான விஸ்ரா ஆய்வில் இதயவால்வு பிரச்சினையில் அடைப்பு ஏற்பட்டு மருத்துவ மாணவி உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது’’ என தெரிவித்துள்ளனர். இதனால் மாணவியின் இறப்பில் கடந்த 18 நாட்களாக இருந்த மர்மம் விலகியது.



Trending Now: