இனிப்பு கொடுத்த ஊழியருக்கு முத்தம் கொடுத்த பேரூராட்சி செயல் அலுவலர் சஸ்பென்ட்

19-05-2020 01:38 PM

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பணிநேரத்தில் பெண்ஊழியருக்கு முத்தம் கொடுத்த செயல்அலுவலர் வீடியோ வெளியான நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வேடசந்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் கோபிநாத் என்பவர் செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார். கடந்த நவம்பர் மாதம் கோபிநாத் பணியில் இருந்தபோது அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவர் தனது பிறந்த நாளுக்காக இனிப்பு கொடுத்து உள்ளார். அப்போது திடீரென இருக்கையில் இருந்து எழுந்த கோபிநாத் பெண் ஊழியருக்கு முத்தம் கொடுத்துள்ளார்.

இந்த காட்சிகள் கடந்த சில நாட்களாக வாட்ஸ்-அப்பில் வைரலானது. இதையடுத்து விசாரணை நடத்திய பேரூராட்சி உதவி இயக்குனர் குருராஜ், கோபிநாத்தை பணியிடை நீக்கம்  செய்து உத்தரவிட்டுள்ளார்.Trending Now: