சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில்பேருந்து இயக்கப்படும் - போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல்

16-05-2020 04:55 PM

திண்டுக்கல் :    இன்னும் 2 நாட்களில் மாவட்ட அளவில் பேருந்துகளை இயக்க வாய்ப்பு இருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.ஊரடங்கால் கடந்த 50 நாட்களுக்கு மேலாக தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் முற்றிலும் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், விரைவில் மாவட்ட அளவில் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில் கோவை, சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனோ இல்லா மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களுக்கு விரைவில் குறைந்த அளவிலான போக்குவரத்து சேவையை தொடங்க ஆலோசித்து வருகிறோம். இன்னும் இரண்டு நாட்களில் அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.

அதேபோல குறைவான நோய்த்தொற்று இருக்கக்கூடிய மாவட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பேருந்துகளை இயக்க திட்டமிட்டிருப்பதாகவும், ஆனால் அதிக பாதிப்பு கொண்ட சென்னை போன்ற நகரங்களுக்கு பேருந்து சேவை முற்றிலும் பொதுமக்களுக்கு இருக்காது அதற்கான ஏற்பாடுகள் காலதாமதம் ஆகும் என்றும் தெரிவித்தார்.Trending Now: