ரேஷன் அரிசி யாருக்கு எவ்வளவு? கலெக்டர் விளக்கம்

12-05-2020 08:00 PM

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மே, ஜூன் மாதங்களில் யாருக்கு எவ்வளவு ரேஷன் அரிசி கிடைக்கும் என்பதை கலெக்டர் விளக்கி உள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதின் காரணமாக மக்களுக்கு உணவு பொருள் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை  கடந்த ஏப்ரல் மாதம் 27 ம் தேதி படி மக்களுக்கு கூடுதலாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கிட ஆணையிடப்பட்டது. அதன்படி குடும்ப அட்டையில் பதிவு பெற்றுள்ள உறுப்பினர்களை பொறுத்து நியாயவிலை கடைகளில் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. 2020 ம் ஆண்டில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு அரசாணையின்படி வழங்கப்படும் பொருட்கள் மட்டுமே கணக்கீட்டின்படி வழங்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் போது தங்கள் கைபேசிக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தியின்படி பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து குடும்ப அட்டைதாரர்கள்  வாங்கி கொள்ள வேண்டும் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

12 கிலோ டூ 187.5 கிலோ

அரசு அறிவித்து உள்ள அளவீடு படி ஒரு பெரியவர் உள்ள முன்னுரிமை குடும்ப அட்டைக்கு 12 கிலோவும், முன்னுரிமை அற்ற குடும்ப அட்டைக்கு 12 கிலோவும் கிடைக்கும். 4 பெரியவர்கள் இருந்தால் முன்னுரிமை உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் மாதம் 20 கிலோவும், மே மாதம் 50 கிலோவும், ஜூன் மாதம் 50 கிலோவும் கிடைக்கும். முன்னுரிமை அற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கும் அதேபோல் கிடைக்கும். 10 பெரியவர்கள் இருந்தால் முன்னுரிமை உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் மாதம் 50 கிலோவும் மே மாதம் 125 கிலோவும் ஜூன் மாதம் 125 கிடைக்கும் முன்னுரிமை அற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் மாதம் 20 கிலோவும் மே மாதம் 50 கிலோவும்  ஜூன் மாதம் 50 கிலோவும்  கிடைக்கும். 15 பெரியவர்கள் உள்ள முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் மாதம் 75 கிலோவும் மே மாதம் 187. 5 கிலோவும், ஜூன் மாதம் 187.5 கிலோவும் கிடைக்கும். முன்னுரிமை அற்றவர் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் மாதம் 20 கிலோவும் மே மாதம் 50 கிலோவும் ஜூன் மாதம் 50 கிலோவும் ரேஷன் அரிசி கிடைக்கிறது.


யார் யாருக்கு எவ்வளவு ரேஷன் அரி கிடைக்கும் என்பதற்கான  அளவீடு பட்டியல்

Trending Now: