கடைகள் திறப்பு மக்கள் வியாபாரிகள் மகிழ்ச்சி டீ பிரியர்கள் உற்சாகம்

11-05-2020 03:18 PM

தூத்துக்குடி மே 12-

தூத்துக்குடி மாவட்டத்தில் கடைகள் திறப்பு மக்கள் மத்தியில் உற்சாகம் எழுந்துள்ளது.

சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை கதிகலங்க வைத்து விட்டது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் 25 ம் தேதி முதல் வரும் 17 ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் சில தொழிற்சாலைகள், தனிக்கடைகள் அரசின் நிபந்தனைகளோடு செயல்பட துவங்கியது. இந்நிலையில் கடந்த 7 ம் தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டது கோர்ட் மதுக்கடைகளை  அடைக்க உத்தரவிட்டது.  அதன்படி தமிழகத்தில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டது. இந்நிலையில் 34 வகையான கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் கடைக்காரர்கள் மத்தியில் உற்சாகம் எழுந்தது.  

தூத்துக்குடி மாவட்டம்

 மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரையும் ,இதர தனிக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும் தேனீர் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம் குளிர்சாதன வசதி இல்லாத நகை கடைகள் காலை 10 மணி முதல்  மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்திருந்தது அதன்படி நேற்று காலையில் இருந்தே மாவட்டத்தில் கடைகள் திறப்பதில் கடை உரிமையாளர்கள் ஆர்வமாக செயல்பட்டனர். கடந்த 9 ம் தேதி முதல் மாவட்டத்தில் திறக்கப்பட்ட கடைகளை தவிர  பிற தனிக்கடைகளில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டது. கடைகள் அதிகமாக திறக்கப்பட்டதால் கடந்த 47 நாட்களாக வீடுகளில் இருந்து வந்த மக்கள் தங்களுடைய அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்குஅனுமதி கிடைத்துள்ளது. பஜாருக்கு வந்த மக்கள் தங்களுடைய அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு  கடைகளை வீதிக்கு உற்சாகமாக சென்றனர்.

வாகன நெருக்கடி

கடைகள் பெரும்பாலும் திறக்கப்பட்டதால் கடைகளுக்கு வேலைக்கு செல்பவர்கள், பொருட்கள் வாங்குவீர்கள் என்று அதிகமானவர்கள் பைக் மற்றும் பிற வாகனங்களில் சென்றனர். பஸ்கள் ஓடாததால் அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களும்  வாங்குபவர்கள் முதல் கடைக்கு வேலைக்கு செல்பவர்கள் வரை  பிற வாகனங்களில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகின்றனர். இதனால் நேற்று மாவட்டத்தில் ரோடுகளில் எங்கு பார்த்தாலும் வாகனங்கள் அதிகமாக சென்றது. படிப்படியாக இயல்பு நிலைக்கு மாறுவதால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள், கடை உரிமையாளர்கள் மத்தியில் உற்சாகம் எழுந்துள்ளது.

டீ கடைகள்


மக்கள் டீ கடைகளில் நின்று டீ குடித்து விட்டு சிறிது நேரம் பேசி செல்வது வழக்கம். 2 பேர் சந்தித்து கொண்டால் டீ குடித்து கொண்டு பேசலாம் என்று கூறி கொண்டு டீ கடைக்கு சென்று டீ குடித்து வந்தது எல்லாம் கடந்த 47 நாட்களாக வீட்டில் முடங்கி இருந்தவர்கள் டீ கடைகள் திறந்ததை முன்னிட்டு மெதுவாக நடந்து வந்து டீ கடைகளில் பார்சலுக்கு மட்டும் அனுமதித்ததால் பார்சல் டீ வாங்கி கொண்டு உற்சாகமாக சென்றனர்.Trending Now: