தூத்துக்குடி மாவட்டம் கொடுக்கல் வாங்கல் தகராறு

09-05-2020 02:42 PM

தூத்துக்குடி: நாசரேத் அருகே உள்ள உடையார்குளம் காந்தி நகரை சேர்ந்தபலவேசம் மற்றும் அவரது மருமகன் தங்கராஜ் ஆகியோர் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வெட்டிக் கொலை -  5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல் - நாசரேத்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் உடையார்குளம் காந்திநகர் கிராமத்தை சேர்ந்த பலவேசம்(60) விவசாய கூலி தொழிலாளியான இவர் அருகேயுள்ள வைத்தியலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த சண்முகதுரையிடம் வீட்டு நில பத்திரத்தை வைத்து பணம் வாங்கினார். பலவேசம் வாங்கிய பணத்தை சண்முகதுரையிடம் திருப்பி கொடுத்தார். சண்முகதுரை நில பத்திரத்தை கொடுக்காததால் பலவேசம் நாசரேத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அளித்ததின் பேரில் மோசடி செய்தல், தீண்டாமை வன்கொடுமை ஆகிய பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சண்முகதுரையை நேற்று மாலை கைது செய்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சண்முகதுரையின் உறவினர்கள் 5 பேர் கொண்ட கும்பல் நேற்று இரவு 10 மணியளவில் வீடு புகுந்து குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்த பலவேசம் மற்றும் அவரது மருமகன் தங்கராஜ் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு கொலையாளகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பலவேசமும் அவரது மருமகன் தங்கராஜும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாசேரேத் காவல்துறையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் .

இந்த சம்பவம் குறித்து வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்த சண்முகதுரை உறவினரான செல்லத்துரை,பாரதி, முத்துராஜ், ஆகியோர் மீது நாசரேத் காவல்துறை வழக்கு பதிவுசெய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி கொண்டிருக்கிண்றனர். இந்த இரட்டைக்கொலை சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.Trending Now: