ஆயுர்வேதக் நோயாளிகள் வெளியேற்றம்- கொரோனா எதிரொலி

24-03-2020 11:36 AM

நாகர்கோவில்

சிறப்பு நிருபர்

கன்னியாகுமரி மாவட்டம் ஆயுர்வேத கல்லூரி நாகர்கோவிலில் அமைந்துள்ளது. மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த கல்லூரியில் ஆயுர்வேத சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினமும் வெளி நோயாளிகள் ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். தொடர் சிகிச்சைக்காக டாக்டர்கள் அறிவுறுத்தலின்படி பல நோயாளிகள் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திடீர் டிஸ்சார்ஜ்

இன்று காலை 10 மணிக்கு மேல் வெளிநோயாளிகள் வரத்து பஸ் நிறுத்தம் காரணமாக குறையதொடங்கியது.மேலும் உயர் அதிகாரியின் உத்தரவுபடி உள்நோயாளிகள் திடீரென டிஸ்ஜார்ஜ் ஆகியுள்ளனர். இதுகுறித்து விசாரித்தபோது கொரோனா வைரஸ் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை மேற்கொண்டிருக்கலாம் என அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன