ஸ்ரீவைகுண்டம் அருகே பயங்கரம். பெட்ரோல் பங்க் உரிமையாளரை கட்டிப்போட்டுவிட்டு 65 சவரன் நகை, ரொக்கம் கொள்ளை

21-03-2020 02:05 PM

ஸ்ரீவைகுண்டம்.

  தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பால்குளத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் பால்குளத்தில் அமைந்துள்ளது. நேற்று இரவு சொந்த வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்துள்ளார். அதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் இன்று அதிகாலை 6 மணிக்கு அவர் காலையில் வீட்டில் இருந்தபோது காரில் 2 கொள்ளையர்கள் வந்துள்ளனர். 70 வயதான பாலசுப்பிரமணியனின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டனர்.

பீரோவில் இருந்த 65 சவரன் தங்க நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் பணத்தையும் அள்ளிக் கொண்டு காரில் ஏறிப் பறந்து விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் ஆழ்வார்திருநகரி போலீசார் மற்றும் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி நேரில் வந்து பாலசுப்பிரமணியனிடம் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய்கள் வரவழைக்கப்பட உள்ளன. 

இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.