திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் பகதர்கள் தரிசனத்திற்கு தற்காலிக தடை

20-03-2020 01:57 PM

திருச்செந்தூர்

கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் பகதர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

கொரனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் வரும் மார்ச் 31 வரை பக்தர்கள் தரிசனத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் தரிசனம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. மேலும் வழக்கம் போல கோவில் திறக்கப்பட்டு ஆகம விதிப்படி அனைத்து கால பூஜைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டதால் கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.