தென்காசியில் வெள்ளாட்டின ஆய்வு மையம் சட்டசபையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

17-03-2020 08:46 PM

சென்னை,

புதிய தென்காசி மாவட்டத்தில் ரூ 2.70 கோடி மதிப்பீட்டில் வெள்ளாட்டின ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்று கால்நடைபராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

கால்நடை பாராமரிப்பு துறை மானியக்கோரிக்கை மீதான விவாதங்களுக்கு  அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் 22 அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விபரம் வருமாறுL  

தமிழ்நாட்டின் விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய தென்மாவட்டங்களை பூர்வீகமாகக் கொண்ட கன்னி மற்றும் கொடி ஆட்டினங்களைப் பாதுகாக்கவும், மரபியல் திறனை உயர்த்தவும் , புதியதாக உருவாக்கப்பட்டுள்ள தென்காசிமாவட்டத்தில் வெள்ளாட்டின ஆராய்ச்சி மையம்ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவஅறிவியல் பல்கலைக்கழகம் ரூ.2.70 கோடி நிதி ஒதுக்கீட்டில் இந்த வெள்ளாட்டின ஆராய்ச்சி மையத்தை அமைக்கும்.

புதியகால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் ரூ.1.70 கோடி செலவில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கப்படும். 

இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்நடைப் பண்ணையாளர்கள் பயனடைவார்கள்..

4 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி 

வெறிநோய் தாக்குதல்களிருந்து மனிதர்களைப் பாதுகாக்க நடப்பாண்டில் ரூ.1.67 கோடி செலவில், நகராட்சிகளில் உள்ள 4 லட்சம் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்படும்.

சென்னை சிவப்பு செம்மறியாடு உள்ளீட்டு மையம் ரூ. 2.85 கோடி நிதி ஒதுக்கீட்டில் கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கத்தில் நிறுவப்படும்.

தமிழகத்தின் காவிரி  டெல்டாவில் விலங்குவழிப் பரவும் நோயறி ஆய்வகம் ரூ.2.54 கோடி நிதி ஒதுக்கீட்டில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாட்டில் நிறுவப்படும்.

திருச்சி கருப்பு செம்மறியாட்டின ஆராய்ச்சி நிலையம் ரூ.2.12 கோடி நிதி ஒதுக்கீட்டில் தருமபுரி மாவட்ட பாலக்கோடு ஒன்றியத்தில் 200 ஏக்கர் பரப்பளவில்

அமைக்கப்படும். இதன்மூலம் தரம் வாய்ந்த ஆடுகள் பண்ணையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருமானம்அதிகரிக்க வழிவகை செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்,