திருவேங்கடம் சங்கரன்கோவில் தாலுகாவில் 3 நாட்கள் 144 தடை

16-03-2020 12:53 PM

பாளையங்கோட்டை

திருவேங்கடம் சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு மூன்று நாட்கள் கடைப்பிடிக்க உத்தரவை கொடுக்கப்பட்டுள்ளது

கடந்த சில வருடங்களுக்கு முன்னர்குறிஞ்சான் குளம் கிராமத்தில் நடந்த சிலை அமைப்பது பிரச்சினை காரணமாக இரு கோஷ்டிகள் இடையே மோதல் ஏற்பட்டு படுகொலையில் முடிந்தது. 14 ம்தேதி நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தக்கோரி புரட்சித் தமிழகம் அமைப்பினர் மனு அளித்தனர்.

விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் சங்கரன்கோவில் ஆர்ப்பாட்டம் நடத்த மனு அளித்தனர். இதன் அடிப்படையில் திருவேங்கடம் சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் 144 தடை அறிவிக்கப்பட்டது. எதனால் இந்த தாலுகாக்களில் அமைதி நிலவியது