ரவுண்டான கட்டிடம் இடிந்து விழுந்தது: அமைச்சர் செல்லூர் ராஜு நூலிழையில் தப்பினார்

08-03-2020 04:18 PM

மதுரை,

மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்ட நிகழ்ச்சியின் போது புதிதாக கட்டப்பட்டுள்ள ரவுண்டானா இடிந்து விழுந்ததில் அமைச்சர்  நூலிழையில் தப்பினார்.

மதுரை செல்லூர் ரவுண்டானா பகுதியில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டிருந்த ரவுண்டானா கட்டிடத் திறப்பு விழாவில் கபடி வீரர்களின் நினைவு போற்றும் கபடி சின்ன சிலை நிறுவுவது குறித்து தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அந்த பகுதியில் 40 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த ரவுண்டானா கட்டிடத்தில் மேல் நின்று, மக்கள் முன்பாக பேசியபோது, திடிரென கட்டடம் மேல் இருந்த டைல்ஸ்கள் கற்கள் உடைந்து 5 அடிக்கு பள்ளம் ஏற்பட்டது. அதன் மேல் நின்றுகொண்டிருந்த அதிமுகவினர் குழிக்குள் விழுந்துவிட்டனர்.

இந்நிகழ்வால், மைக்கில் பேசிக்கொண்டிருந்த அமைச்சர் செல்லூர் ராஜு பதற்றமடைந்த நிலையில் நூலிழையில் உயிர்தப்பினார். இதனையடுத்து அவசர அவசரமாக காவல்துறையினர் மற்றும் தொண்டர்கள்  அவரை மீட்டு அழைத்துசென்றனர்.

 பின்னர், நிகழ்ச்சியை பாதியிலயே ரத்து செய்துவிட்டு அமைச்சர் புறப்பட்டு சென்றார்.