மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு பெரிய முதலீட்டை எதிர்பார்க்கிறோம்: அமைச்சர் பேச்சு

19-01-2020 05:11 PM

சென்னை,

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு உற்பத்தி துறையில் பெரிய முதலீடுகள் மேற்கொள்வது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்ப்பார்ப்பதாக  தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் க. பாண்டியராஜன்  இன்று தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் சமூகவலைதள உறுப்பினர்கள் இணைந்து மத்யமர் எனும் பெயரில் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் தன்னார்வ அமைப்பை ஏற்படுத்தி பல்வேறு நலப்பணிகளை செய்து வருகின்றனர்.

சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற மத்யமர் அமைப்பின் 2ம் ஆண்டு விழாவில் அமைச்சர் க. பாண்டியராஜன் பங்கேற்றார்.

பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன்,

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 9 மருத்துவ கல்லூரிகளுக்கான நிதி ஒதுக்கீடு, புதிதாக 4 மருத்துவ கல்லூரிகள் தொடங்குவது தொடர்பான அறிவிப்பு உள்ளிட்டவை வெளியிடப்படும் என எதிர்பார்ப்பதாகவும்

சென்னை – கன்னியாகுமரி ரயில்பாதை இருவழி பாதையாக உயர்த்த மத்திய அரசு உதவ வேண்டும். எனவும் அமைச்சர் க. பாண்டியராஜன்  கூறினார்.Trending Now: