இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியல்: சென்னை ஐஐடி முதலிடம்

11-01-2020 07:19 PM

டில்லி,

இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான மத்திய அரசின் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலை மத்திய அரசின் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியல் தற்பொழுது வெளியாகி உள்ளது. இதில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மற்ற பல்கலைக் கழகங்களின் சிறந்த கல்விக்கான தரவரிசை விவரம் பின்வருமாறு.

அண்ணா பல்கலைக்கழகம் 7வது இடம்,

பாரதியார் பல்கலைக்கழகம் 14வது இடம்

சென்னைப் பல்கலைக்கழகம் 20வது இடம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் 28வது இடம்

சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் 32வது இடம்  பிடித்துள்ளன.Trending Now: