அதிமுக முன்னாள் எம்எல்ஏ சக்திவேல் முருகன் மாரடைப்பால் காலமானார்

03-01-2020 12:36 PM

நெல்லை,

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சக்திவேல் முருகன் மாரடைப்பால் காலமானார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ சக்திவேல் முருகன் மாரடைப்பால் இன்று காலமானார்.

இவர் கடந்த 2001-2006 காலகட்டத்தில் அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்தார்.

மதுரா கோட்ஸ் அதிமுக தொழிற்சங்க தலைவராகவும் சக்திவேல் முருகன் செயல்பட்டு வந்துள்ளார். சக்திவேல் முருகனின் மறைவு அதிமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Trending Now: